ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மழையில் நனையும் விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள்...*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மழையில் நனையும் விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குதொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் அமைந்துள்ளது வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம் பகுதி. இந்தப் பகுதிகளில் பெரும்பாலும் விவசாய தொழில்களை நம்பி உள்ள இந்த பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் விவசாயம் செய்யப்படும் நெற்பயிர்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது. இந்த பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாய அமைப்பினர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் துரை சார்ந்த அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வத்திராயிருப்பு, இலந்தைகுளம், கல்யாணிபுரம் மகாராஜபுரம், கோட்டையூர், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நெல்லை சுந்தரபாண்டியம் சாலை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலை காரணமாக விளைவிக்கப்பட்ட நெல் மழையில் நனைந்து பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் நிரந்தரமாக அரசு நேரடி கொள்முதல் நிலைய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என நெல் பயிரிடும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

