அரசு கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்
தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மண்டலம்-3, வார்டு-38 க்குட்பட்ட அஸ்தினாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம்,மண்டலம்-3, வார்டு-25க்குட்பட்ட பாலாஜி நகரில் ரூ.9.30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு பூங்கா, மண்டலம்-1, அனகாபுத்தூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை இன்று சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா. மோ. அன்பரசன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, அரசு அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story



