தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பிய சிறப்பு ஆசிரியர்கள்

X
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு 22 வருடங்களாக கல்வி கற்பிக்கும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு, தொழிலாளர் வைப்பு நிதி,பணி நிரந்தரம் கோரி முதல்வருக்கு தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 5% ஊதியம் உயர்த்தி வழங்கி R.C.No. 1352/A3/SS/2025 Dates: 11.07.2025- செயல்முறை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அனைத்துநிலைப் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோதும் உள்ளடங்கிய கல்வி பணியாளார்களுக்கு மட்டும் விடுபட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஊதியம் உயர்வு இல்லாமல் பணிசெய்துவரும் எங்களுக்கு இந்தமுறையாவது கருணை கூர்ந்து உள்ளடங்கிய கல்வி சிறப்பு பயிற்றுநர்களுக்கும், இயன்முறை மருத்துவர்களுக்கும் மற்றும் சிறப்பு பயிற்சி மையம் பராமரிப்பாளார். உதவியாளார்களுக்கும் ஊதியம் உயர்த்தி ஆணை வழங்கிட பணிந்து வேண்டுகின்றோம். 2) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் ஆகிய இருவரும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணி ஆணை வழங்கிட ஆணையிட்டும் ஒருங்கிணைத பள்ளிக்கல்வி திட்டம் வழங்கிட மறுத்து வருகின்றது. பணி ஆணை வழங்கி உதவிட பணிந்து வேண்டுகின்றோம். 3) நீதி மன்ற ஆணையின் அடிப்படையில் தொழிலாளர் வைப்பு நிதி EPF பிடித்தம் செய்திட சென்னை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு உத்தரவுயிட்ட பின்னரும் மீதமுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கிட தாமதிக்கப்பட்டு வருகின்றது. பணியில் இணைந்தநாள் முதல் தொழிலாளர் வைப்பு நிதி EPF வழங்கி உதவிட பணிந்து வேண்டுகின்றோம். 4) உள்ளடங்கிய கல்வியில் மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊர்திப்படி 8 மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கி உதவிட பணிந்து வேண்டுகின்றோம் 5) உச்ச நீதிமன்ற ஆணை திரு ரஜ்னிஷ்குமார் பாண்டே தீர்ப்பின் அடிப்படையில் நாடுமுழுவதும் சிறப்பு பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றது. அதுபோன்று தமிழ்நாட்டிலும் சிறப்பு பயிற்றுநர்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் பணி செய்துவரும் எங்களையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கி உதவிட பணிந்து வேண்டுகின்றேன். பல்வேறு கோரிக்கைகளை முதல்வருக்கு மாவட்ட தபால் அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Next Story

