கெலமங்கலம்:அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கிழக்கு ஒன்றியம் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு உரையற்றினார். அப்போது அடுத்த மாதம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராயக்கோட்டையில் பகுதியில் வர உள்ளார். இதை ஒட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என்றார். இதில் அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி உள்பட மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

