பொங்கலூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

பொங்கலூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X
பொங்கலூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை அவனாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றார்
பொங்கலூரை அடுத்த உகாயனூர் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 45). அவருடைய மகள் காயத்ரி (24). இவருக்கும், பழனியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் காயத்ரி பழனியில் இருந்து தனது தந்தை வீடான பெரிய காட்டுப்பாளையத்தில் வந்து தங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே விவாகரத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது காயத்ரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காயத்ரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் தற் கொலைக்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story