தீ தடுப்பு பயிற்சி

X
திருக்கோவிலுார் தீயணைப்பு நிலையம் சார்பில் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.திருக்கோவிலுார் வட்டாரத்தில் பணியாற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, சமையல் செய்யும் பொழுது ஏற்படும் காஸ் கசிவு மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு சமயோகிதமாக செயல்பட்டு கட்டுப்படுத்துவது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஷ்வர் தலைமையில், சிறப்பு நிலை அலுவலர் விநாயகம் மேற்பார்வையில் தீயணைப்பு குழுவினர் நேரடி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். அங்கன்வாடி உதவியாளர்கள் 50க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கல்பனா உள்ளிட்ட அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story

