ஆர்.எஸ்.எஸ். தலைவர் கன்னியாகுமரி வருகை

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கன்னியாகுமரி வருகை
X
3 அடுக்கு பாதுகாப்பு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரா வளாகத்திற்கு வந்தார். கேந்திர வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை கேந்திர நிர்வாகிகள் வரவேற்றனர். மோகன் பகவத் வருகையையொட்டி விவேகானந்த கேந்திர வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேந்திராவுக்கு வந்தவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். எஸ்.பி. ஸ்டாலின் கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இன்று முதல் 21ம் தேதி வரை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் தங்கும் மோகன் பகவத், கேந்திரா, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 21ம் தேதி காலை கார் மூலம் தூத்துக்குடி செல்லும் மோகன் பகவத் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
Next Story