ஆரணி கோட்டை வேம்புலிஅம்மன் ஆலயத்தில் நூதன புஷ்ப பல்லக்கு.

ஆரணி கோட்டை வேம்புலிஅம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா முன்னிட்டு நூதன புஷ்ப பல்லக்கு நடைபெற்றது.
ஆரணி கோட்டை வேம்புலிஅம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா முன்னிட்டு வெள்ளிக்கிழமை நூதன புஷ்ப பல்லக்கு நடைபெற்றது. ஆரணி கோட்டை வேம்புலிஅம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா வருடந்தோறும் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆடி திருவிழா முன்னிட்டு வியாழக்கிழமை இரவு 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை கூழ்வார்க்கும் திருவிழா முன்னிட்டு பக்தர்கள் கமண்டல நாகநதிக்கரையில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்து காந்திரோடு, மார்க்கெட் ரோடு, அண்ணாசிலை, நகராட்சி அலுவலகம் வழியாக வந்து ஆலயத்திற்கு சென்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பிற்பகல் நேரத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. ஆரணி நகரத்தில் உள்ள வி.ஏ.கே.நகர், காவலர் குடியிருப்பு பகுதி, பள்ளிக்கூடத்தெரு, கோட்டை வடக்கு வீதி, ஆரணிப்பாளையம் பகுதி மக்கள் என ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் இருந்த கொப்பரையில் கூழ்ஊற்றினர். வெள்ளிக்கிழமை மாலை நூதன புஷ்ப பல்லக்கு நடைபெற்றது. இப்பல்லக்கில் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு அமர்த்தி இருந்தனர். புஷ்பலக்கும் முன்பு நாதஸ்வரம், தவில், இசை கச்சேரி, தாரை தப்பட்டை, ஒயிலாட்டத்துடன் ஊர்வலம் சென்றனர். இவ்விழாவில் ஆரணி, கண்ணமங்கலம், தேவிகாபுரம், சேத்துப்பட்டு. போளூர், செய்யார், வந்தவாசு, வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுத்தலைவர் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் விழாக்குழுவைச்சேர்ந்த பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், அக்ராபாளையம் குணா, ஏ.எஸ்.ஆர்.சரவணன், செல்வராஜ், ஜி.சங்கர், பையூர் சரவணன், சித்தேரி ஜெகன், இயைராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், பேராசிரியர் சிவா, வழக்கறிஞர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Next Story