பெண் உதவி ஆணையர் லஞ்சப்பிரச்சினை: பணியிடை நீக்கம் நடவடிக்கை

X
கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டியில் உள்ள தனியார் கோவிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர கோவையை சேர்ந்த சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அறநிலைய அலுவலகத்தில் உதவி ஆணையர் இந்திராவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதற்காக இவர் ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன தடவிய பணத்தை பெற்றபோது இந்திராவை கைதுசெய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, அறநிலையத்துறைக்கு போலீசார் அறிக்கை அனுப்ப, உதவி ஆணையர் இந்திரா மீது பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் அவர் பணியிடை நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story

