ஹெல்மெட் கேட்டு அடம்பிடித்த குழந்தைக்கு போலீஸ் ஹெல்மெட் வாங்கி அணிவித்து கவுரவம்!

ஹெல்மெட் கேட்டு அடம்பிடித்த குழந்தைக்கு போலீஸ் ஹெல்மெட் வாங்கி அணிவித்து கவுரவம்!
X
ஹெல்மெட் கேட்டு அடம்பிடித்த குழந்தைக்கு ஹெல்மெட் வாங்கிக் கொடுத்து கௌரவித்த போலீசாரின் செயலை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.
கோவை, சிங்காநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார், தனது மனைவி பத்மாவதி மற்றும் 3 வயது மகள் வேதாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், “எனக்கும் ஹெல்மெட் வேணும்” என மகள் வேதா அடம்பிடித்தாள்.vஇதை பார்த்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா விசாரித்த போது, குழந்தையின் நியாயமான கோரிக்கை தெரியவந்தது. உடனே போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார், உதவி கமிஷனர் திருநாவுக்கரசு பரிந்துரையின்பேரில் புதிய ஹெல்மெட் வாங்கி அந்த குழந்தைக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் சால்வை அணிவித்து குழந்தையை போலீசார் கவுரவித்தனர். இந்நிகழ்வை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கந்தவேலன் உள்ளிட்டோர் போலீசாரின் செயலை பாராட்டினர்.
Next Story