காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வித் திருவிழா பால்குட ஊர்வலத்தில் கவனம் ஈர்த்த பாரம்பரிய பெருஞ்சலங்கையாட்டம்..... கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து காமராஜருக்கு

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வித் திருவிழா பால்குட ஊர்வலத்தில் கவனம் ஈர்த்த பாரம்பரிய பெருஞ்சலங்கையாட்டம்..... கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து காமராஜருக்கு
X
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வித் திருவிழா பால்குட ஊர்வலத்தில் கவனம் ஈர்த்த பாரம்பரிய பெருஞ்சலங்கையாட்டம்..... கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து காமராஜருக்கும் மரியாதை....
சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வித் திருவிழா பால்குட ஊர்வலத்தில் கவனம் ஈர்த்த பாரம்பரிய பெருஞ்சலங்கையாட்டம்..... கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து காமராஜருக்கும் மரியாதை.... மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் பெண்கள் பழைய விருதுநகர் சாலையிலுள்ள காமராஜர் வாசக சாலையிலிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பின்னர் காமராஜர் சிலைக்கு பாலபிஷேகம் செய்தனர். ஊர்வலத்தின் போது கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மட்டுமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்களில் சலங்கை கட்டி பாரம்பரியமிக்க பெருஞ்சலங்கை நடனமாடியது காண்போரின் கவனத்தை ஈர்த்தது. விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி காமராஜர் சிலைக்கு கிரேன் இயந்திரம் மூலம் பிரம்மாண்டமான மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுடன், சமுதாயப் பெரியோர்களும், தொழிலதிபர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரும் கலந்து கொள்ள இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story