திமுக பாடி போன லாரி. டயர் போன பேருந்து என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு

X
திமுக பாடி போன லாரி. டயர் போன பேருந்து என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்தார். மேலும் திமுகவின் நாடக அரசியலை மக்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வரும் 7 ஆம் தேதி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதிக்கு பரப்புரை செய்வதற்காக வர உள்ளார். அப்போது ஒரு சில இடங்களில் மக்களை நேரில் சந்தித்து பேச உள்ளர். திறந்த வாகனத்தில் நின்றவாறு வேன் பரப்புரை மற்றும் சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்த பரப்புரையை சிறப்பாக நடத்துவது குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர ஒன்றிய நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் மத்தியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசும்போது, கடந்த 2021 தேர்தலில் நான் ராஜபாளையம் தொகுதியில் வெற்றியை பறிகொடுத்தது ஒரு விபத்து. சில புல்லுருவிகளை நம்பினேன். அவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர். தற்போது களை எடுக்கப்பட்ட செழிப்பான பயிராக வலுவாக ராஜபாளையத்தில் அதிமுக உள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் கடை கோடி தொண்டன் நின்றாலும் வெற்றி பெறுவான். தற்போது வரும் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக பலமாக இருப்பதாக கூறப்படுகிறது. திமுக குறைவாக திருடி இருந்தால் தப்பி இருக்கலாம். மூடை முடையாக திருடி இருக்கிறார்கள். சரியான கட்டத்தில் மாட்டிக் கொண்டதால் திமுக தப்பிக்க வழியே இல்லை. கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வந்த மரபை மீறி திமுக வீடு வீடாகச் சென்று கேவலப்பட்டு அசிங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறார்கள். 35 வயதுக்கு உட்பட்ட உறுப்பினர்கள் திமுகவில் யாருமே இல்லை. முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவில் உள்ளனர். திமுக பாடி போன லாரி. டயர் போன பேருந்து. இதனால் அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை. அதிமுக வண்டி அற்புதமானது. மாலுமியாக இருக்கக்கூடிய எடப்பாடி அவர்கள் தெளிவாக வண்டியை ஒட்டி செல்கிறார். இதை கேலி செய்த முதல்வருக்கு எடப்பாடியார் பதிலடி கொடுத்துள்ளார். கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் திமுகவிடம் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்தது அதிமுக ஆட்சி. அதுபோன்று திமுக ஆட்சியில் எதுவும் செய்யாததால் அதிமுகவை பாஜகவின் அடிமை என முதல்வர் ஸ்டாலின் தூற்றுகிறார். கடந்த 1999 ஆம் ஆண்டு திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது பாஜக மதவாத கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா. பிஜேபி பலமான கட்சி. அதிமுக மிக பலமான கட்சி. இரண்டு கட்சிகளுக்கும் அடித்தளம் பலமாக இருக்கிறது. இரு கட்சிகளும் இணைந்தால் ஆட்சியைப் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தால் பாஜகவை தீண்ட தகாத கட்சியாக முதல்வர் பிரகடனப்படுத்துகிறார். அவரது ஓரங்க நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது. எடப்பாடியார் அவர்களின் எதார்த்தமான பேச்சை தான் மக்கள் விரும்புகிறார்கள். திமுகவின் நாடக அரசியலை மக்கள் விரும்பவில்லை. தஞ்சை மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடியார் அறிவித்தார். அனைத்து தொழில்களும் அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்டது. தற்போது அனைத்து தொழில்களும் நசிந்து விட்டது. நெசவாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். பட்டாசு உற்பத்தியாளர்கள் பரிதவிக்கின்றனர். அரசு அதிகாரிகள் சொல்வதை கீழ்மட்ட அதிகாரிகள் கேட்பதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழகம் ஸ்தம்பித்து விடும். அந்த அளவுக்கு நிர்வாகம் முடங்கி உள்ளது. எடப்பாடி யார் முதல்வராக இருந்த போது கொரோனா மற்றும் கஜா புயல் காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி தேவையான ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றினார். அம்மா மினி கிளினிக் திட்டத்தை செயல்படுத்தி கொரோனாவை விரட்டி அடித்தவர் எடப்பாடியார். பேரிடர் காலத்திலும் நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து உணவு பொருட்களும் தடையின்றி வழங்கப்பட்டது. இன்று நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்கள் எதுவும் மக்களுக்கு கிடைப்பதில்லை. ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நியாய விலை கடைக்கு செல்ல வேண்டிய அரிசியை கேரளாவுக்கு கடந்துகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடத்தல்காரர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல உள்ளனர். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் டீசல் கிடைப்பதில்லை. அதுவும் வெளி சந்தையில் விற்கப்படுகிறது. இந்த கேவலமான ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் இன்று பயணத்தை எடப்பாடியார் தொடங்கியுள்ளார். இந்த பயணம், பரப்புரை ராஜபாளையத்தில் மிக சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Next Story

