மேலூர் அருகே சட்ட விழிப்புணர்வு கூட்டம்
மதுரை மேலூர் அருகே நேற்று (ஜூலை.19) சருகுவளையபட்டியில் சார்புநீதிமன்ற நீதிபதி சமுண்டீஸ்வரி பிரபா தலைமையில் வட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது . கூட்டத்தில் சார்பு நீதிபதி அவர்கள் பேசியபோது, பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை பேணிபாதுகாத்து நல்லகல்வியை கொடுத்து உரிய திருமண வயது வந்தவுடன், 18 வயதிற்குமேல் திருமணம் செய்துகொடுக்க வேண்டும், குழந்தை திருமணம் கூடாது என்றும், கிராமங்களில் நிறைய பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது, விழாவில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மாண்புமிகு மகாராஜன், மற்றும் வட்டாட்சியர் திருமதி செந்தாமரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



