காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை வாடிப்பட்டி அருகே போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல்ஊண்டிய காவல்துறை அதிகாரியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலால் மதுரை திண்டுக்கல் சாலை வாடிப்பட்டி மெயின் ரோட்டில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் உடனடியாக ஆக்கிரமித்து ஊண்டிய கல்லை அகற்றாவிட்டால் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களின் ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்க போவதாகவும் எச்சரித்தனர் இதனால் செய்வதறியாது திகைத்த அதிகாரிகள் ஒரு மணி நேர பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு ஆக்கிரமித்து ஊண்டிய கல்லை அகற்றினர்.
Next Story