ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ திரிசூலக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் 41ம் ஆண்டு தீ மிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு,கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள்,உலக நன்மைக்காக யாக வேள்வியும், பெண்கள் கடன் தொல்லைகள் நீங்கி குடும்பம் செல்வ செழிப்புடன் திகழவும், மாங்கல்யம் பாக்கியம் வேண்டியும்,108 திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து, அம்மனுக்கு பக்தர்கள் வேப்பம் சீலை சார்த்தலும், கூழ்வார்த்தல் விழாவும் நடந்தது. பின்னர், விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தீ மிதி திருவிழாவில் திருப்புலிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.
Next Story



