பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை

பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை
X
குமாரபாளையத்தில் பெண் மர்மமான முறையில் இறந்ததால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள்  உமாசங்கர், 47, லட்சுமி, 42. கூலி வேலை. நேற்று காலை 06:45 மணியளவில் லட்சுமி இறந்து விட்டதாக, உமா சங்கர், வீட்டின் உரிமையாளர் ஸ்ரீ சைலவெங்கடேசமுருகன், 58, வசம் கூறினார். நேரில் சென்று பார்த்த வீட்டின் உரிமையாளர், அக்கம் அக்கம் உள்ளவர்கள் உதவியுடன், தனியார் ஆம்புலன்ஸ் மூலம், லட்சுமியை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர், இவரை பரிசோதித்த டாக்டர், லட்சுமி இறந்ததாக கூறினார். வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். குமாரபாளையம் போலீசார் உமாசங்கரிடம்  விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story