தன்னார்வலர்களுக்கு பயிற்சி

X
வாணாபுரத்தில் நடந்த முகாமிற்கு, ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் சிவா தலைமை தாங்கினார். துணை இயக்குநர் சுதாகர் திட்டம் குறித்து பேசினார்.தொடர்ந்து 3 ஆண்டுகளாக தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள கிராமத்திற்கு சென்று, தொழுநோய் கண்டுபிடிப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தோலில் ஏற்படும் வெளிர்ந்த அல்லது சிவந்த உணர்ச்சியற்ற தேம்பல், நரம்பு தடித்தல் தொழுநோயின் அறிகுறிகளாக இருக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து, கூட்டு மருந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் தொழுநோயை முழுமையாக குணப்படுத்துதுடன், உடல் ஊனங்களையும் தடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு, குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. இதில், வாணாபுரம் மருத்துவ அலுவலர் கிருஷ்ணகாந்த், மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் குமாரசாமி, செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

