கோவில் தேர் திருவிழாவிற்கான காப்பு கட்டு

X
செங்குணம் அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி. பெரம்பலூர் வட்டம் செங்குணம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா 2025 சூலை 21 இன்று தொடங்கி வரும் சூலை - 29 அன்று வரை நடைபெறுகிறது தேர் திருவிழாவிற்காக சூலை 20 ஞாயிறு இரவு கோவிலில் காப்பு மரம் நடப்பட்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது . இதில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் அம்மன் பக்தர்கள் பலரும் கங்கணம் கட்டிக் கொண்டனர். திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story

