பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை

X
குமரி மாவட்டம் பளுகல் அருகே கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஹிமா லெட்சுமி (16). 11ம் வகுப்பு மாணவி. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் பதிவிடுவது வழக்கம். இதனை தாயார் மற்றும் சகோதரர்கள் கண்டித்து உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்ததை தாயார் கண்டித்ததால் கோபமடைந்த ஹிமா லட்சுமி இரவில் கதவை பூட்டிவிட்டு படுத்து உள்ளார். நேற்று காலையில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். பளுகல் போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

