பல்லடம் அருகே முதல்வரை சந்திக்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம்

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கானோர் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களை அறிவொளி நகர் பகுதியில் அன்றைக்கு குடிசை மாற்று வாரியத்தால் இடம் வழங்கப்பட்டு பொதுமக்களை குடி அமர்த்தியது ஆனால் இன்று வரை தங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் இத்தனை ஆண்டுகள் நடத்தியும் மாவட்ட ஆட்சியர் களால் தங்களுக்கு இதுவரை தீர்வு கொடுக்கப்பட முடியவில்லை என்றும் 22, 23 ஆகிய நாளை மற்றும் நாளை மறுநாள் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட சுற்றுப்பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர்மு க ஸ்டாலின் கலந்து கொண்டு ரோடு ஷோ செல்கிறார் அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக செய்தித் துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அவர்களிடம் தங்களுடைய பட்டா கோருதல் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி கோரியும் தங்களுக்கு அனுமதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை தங்களை அலட்சியம் செய்ததால் தற்போது இப் பகுதியில் ஆயிரம் கணக்கான மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் மேலும் அரசு தரப்பினர் இதுவரை இது தொடர்பாக எந்த பேச்சு வார்த்தைக்கு முன் வரவில்லை என்றும் நாளை தங்களுக்கு நேரம் ஒதுக்கா விட்டால் மேலும் தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் நாளை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தற்போது இப்பகுதியில் போராட்டத்தில்ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story

