வால்பாறை: நீர்நிலைகள் மாசு : குப்பை கொட்டினால் அபராதம் எச்சரிக்கை!

வால்பாறை:  நீர்நிலைகள் மாசு : குப்பை கொட்டினால் அபராதம் எச்சரிக்கை!
X
வால்பாறை நகரிலுள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை கொட்டும் நடைமுறையை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
வால்பாறை நகரிலுள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை கொட்டும் நடைமுறையை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. நகராட்சியின் 21 வார்டுகளில் சில பகுதிகளில் மட்டும் குப்பை சேகரிப்பு நடைபெறுகிறது. மற்ற பகுதிகளில், குறிப்பாக ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டு கழிவுகளை நேரடியாக ஆற்றில் கொட்டி வருவதால், சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் மாசுபடுகின்றன. இதனால், மக்கள் சுகாதார சிக்கல்களில் சிக்கி, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. குடிநீர் வளங்களை பாதுகாக்க, நீர்நிலைகளில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சூழலுக்குப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story