கண் திருஷ்டி பொம்மை அகற்றம் – பெரியார் நூலகத்தில் பரபரப்பு!

கண் திருஷ்டி பொம்மை அகற்றம் – பெரியார் நூலகத்தில் பரபரப்பு!
X
சிறைச்சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவியல் நூலகக் கட்டிட பகுதியில், இரண்டு கண் திருஷ்டி பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது.
கோவை காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவியல் நூலகக் கட்டிட பகுதியில், இரண்டு கண் திருஷ்டி பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆய்வுக்காக வந்த அமைச்சர் எ.வ. வேலு, நான் பெரியார் கொள்கையாளர், பகுத்தறிவாளன். ஆனால் ஒவ்வொருவரும் என்னைப் போல் இருக்க முடியாது; இது ஒப்பந்ததாரர்களின் நம்பிக்கையாக இருக்கலாம். கட்டுமானம் முடிந்ததும் அகற்றப்படும் என்றார். இந்த தகவலை அறிந்த தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், உடனடியாக பார்வையிட்டு, பொம்மைகளை அகற்றவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். இதையடுத்து, கண் திருஷ்டி பொம்மைகள் அப்பகுதியிலிருந்து நேற்று அகற்றப்பட்டன.
Next Story