கோவை மத்திய சிறையில் பாம்பு கடித்ததாக பரபரப்பு – காவலர் மருத்துவமனையில் அனுமதி

X
கோவை மத்திய சிறைச்சாலை குடியிருப்பு பகுதியில் காவலராக பணியாற்றும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் (28), நேற்று முன்தினம் இரவு நடந்துச் செல்வதற்கிடையில் திடீரென காலில் ஏதோ ஊர்வது போல் உணர்ந்துள்ளார். பாம்பு என நினைத்து குதித்து தவறி விழுந்த அவர், பாம்பு கடித்திருக்கலாம் என சந்தேகித்து உடனே தேடி பார்த்தும் பாம்பு எதுவும் தெரியவில்லை. பிரசாந்த் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இந்த சம்பவம் சிறைச்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

