களியனுார் ஊராட்சியில்,சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

களியனுார் ஊராட்சியில்,சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
X
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கிராம சபையில் தீர்மானம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான செயல்பாடு, தமிழ்நாடு சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி தலைமை வகித்தார். வட்டார சமூக தணிக்கை அலுவலர் மேகராஜன் அறிக்கை சமர்ப்பித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் பற்றாளராக பங்கேற்றார். இதில், மஹாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். பணி செய்த நாட்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். களியனுார் புதிய காலனியில் கான்கிரீட் சாலையை சீரமைக்கவும், மண் சாலையான செல்லியம்மன் கோவில் தெருவிற்கு, கான்கிரீட் சாலை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story