திருப்பத்தூரில் வக்ஃபு வாரிய அலுவலகம் அமைக்க ஆட்சியரிடம் மனு

திருப்பத்தூரில் வக்ஃபு வாரிய அலுவலகம் அமைக்க ஆட்சியரிடம் மனு
X
திருப்பத்தூரில் வக்ஃபு வாரிய அலுவலகம் அமைக்க ஆட்சியரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வக்ஃபு வாரிய அலுவலகம் அமைக்கவும் மற்றும் 200 கோடி ரூபாய் மேலான வக்ஃபு வாரிய சொத்தை தனிநபர் விற்பனை செய்த ‌மூத்தவல்லிகள் மீது விசாரணை மேற்கொண்டு சொத்தை மீட்டு தர கோரி 50 கும் மேற்ப்பட்ட வர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தர வள்ளி தலைமையில் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த வாஜித் (43) சமூக ஆர்வலர்கள் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் திருப்பத்தூரில் உள்ள பூரா மசூதி, ஜமியா மசூதி, கும்மத் தர்கா, கோட்டை மசூதி மற்றும் ஈத்கா மசூதி, ஆகிய மசூதிகளுக்கு சொந்தமான வக்ஃபு சொத்துக்களை 1938 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆண்டு தற்போது வரை முன்னாள் மற்றும் இந்நாள்‌ முத்தவள்ளிகள் தனி நபர்கள் மற்றும் தங்களுடைய உறவுமுறை சொந்தங்களுக்கு சுமார் 200 கோடிக்கு மேல் சொத்துக்களை தனி நபர் விற்று விட்டதாகவும் அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்க எடுக்கவேண்டும் என்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வக்ஃபு வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வாஜித் மற்றும் பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்
Next Story