புதிய உணவு டெலிவரி செயலி திருச்செங்கோட்டில் அறிமுகம்

X
பொதுமக்களுக்கு உணவு பண்டங்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் வகையில் zomato swiggy என்ற நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. கமிஷன் தொகை அதிகமாக கேட்பதாலும் பொதுமக்களுக்கு கடையில் வாங்கும் பொருளில் 30 சதவீதம் விலை அதிகமாவதாலும்பொதுமக்கள் நலன் கருதியும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் பில் தொகை கிடைக்க ஏதுவாகவும் இரு தரப்பு நன்மையையும் கருதி திருச்செங்கோடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜோரோஸ்என்ற பெயரில் புதிய உணவு டெலிவரி செய்யும் செயலி அறிமுகம் செய்யப் பட்டது.ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் பூஜை செய்து செயலி துவக்கி வைக்கப் பட்டது மேலும் 25 உணவு சப்ளை செய்யும் பணியாளர்கள் சீருடைகளுடன் இருசக்கர வாகனங்களில் கொடியசைத்து வழிய அனுப்பி வைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஜோரோஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் ராம் பிரசாத், திருச்செங்கோடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் செயலியை அறிமுகம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள், பொருளாளர் ஆனந்தன்,மற்றும் நகரத்தில் உள்ள பல்வேறு ஹோட்டல்களின் உரிமையாளர்கள் ரவிச்சந்திரன், மாரியப்பன், சங்கர் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கதலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் செய்தியாளரிடம் பேசிய போது கூறியதாவது ஏற்கனவே உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்ட வந்த நிறுவனங்கள் ஓட்டலில் உள்ள உணவுகளின் விலையில் 30 சதவீதம் அதிகமாக வைத்து பொதுமக்களிடம் வசூலித்து வந்தனர் மேலும் எங்களிடம் இருந்து பெரும் உணவுக்கான பில் தொகை வழங்குவதில் காலதாமதம் நடந்து வந்தது.தற்போது அந்த நிறுவனங்களை முழுமையாக கைவிட்டு ஜோரோஸ் என்ற நிறுவனத்தின் மூலம் உணவு டெலிவரி செய்யும் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதன் மூலம் நாங்கள் என்ன விலைக்கு விற்கிறோமோ அந்த விலையிலேயே பொது மக்களுக்கு உணவுகள் கிடைப்பதோடு எங்களுக்கான தொகையும் 24 மணி நேரத்தில் நாங்களே எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து செயலி மற்றும் அதன் பயன்கள் என்ன என்பது குறித்து ஜோரோ நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் சி இ ஓ ,ராம்பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜோரோஸ் நிறுவனம்50 நகரங்களில் உணவு டெலிவரி செய்யும் பணியை செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல் நகரில் இந்த பணியை துவக்கினோம். தற்போது திருச்செங்கோட்டில் துவங்கி உள்ளோம். 65 கடைகள் எங்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர் இதன் மூலம் கடையில் என்ன விலையோ அதே விலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படும். அதிகபட்சமாக 15 கிலோ மீட்டர் அளவுக்கு உணவு டெலிவரி செய்யப்படும் இதற்கென முதல் கட்டமாக 25 டெலிவரி பணியாளர்களை நியமித்துள்ளோம்ஹோட்டல்களில் கமிஷன் வாங்காமல் பெரிய நிறுவனங்களாக இருந்தால் மாதம் 3000 ரூபாயும் சிறிய நிறுவனங்கள் என்றால்1500 ரூபாயும் மாத கட்டணமாக வாங்குகிறோம். ஒரு டெலிவரிக்குமூன்று கிலோ மீட்டருக்கு 29 ரூபாய் கட்டணம் பெறுகிறோம்.மூன்று கிலோ மீட்டருக்கு அதிகமாக உள்ள தூரத்திற்கு ஒரு கிலோமீட்டருக்கு ஆறு ரூபாய் கட்டணம் வாங்குகிறோம தூரத்திற்கு தகுந்த அளவுக்கு கட்டணத்தை வாங்குகிறோம். இந்த டெலிவரி கட்டணம் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது எங்களுக்கு மாதந்தோறும் ஹோட்டல்களில் வாங்கும் தொகை வருகிறது. மேலும் 15 கிலோ மீட்டர் வரை டெலிவரி சார்ஜ் ஆக 100 ரூபாயும் குறைந்த அளவாக இருந்தால் மினிமம் கட்டணம் மட்டுமே வசூல் செய்கிறோம். உணவு பண்டங்கள் மட்டுமல்லாது மளிகை கடைகள் சிறு எண்ணெய் நிறுவனங்கள் மரச்செக்கு எண்ணெய் நிறுவனங்கள் மருந்து கடைகள் உள்ளிட்ட எந்தநிறுவனத்தினர் ஆக இருந்தாலும் எங்களோடு இணைந்து பொதுமக்களுக்கு பொருள்களைசப்ளை செய்யலாம் வாங்குவதாக இருந்தாலும்வேறு நிறுவனங்களில் பொருள்கள் வாங்க விரும்புபவர்கள் செயலியை பயன்படுத்தத் தெரியாத போது கடைகளில் பொருளை வாங்கிவிட்டு சொன்னால் கடைக்காரர்கள் எங்களை தொடர்பு கொண்டு புக் செய்தால் நாங்கள் வீட்டிற்கு வந்து டெலிவரி செய்ய தயாராக இருக்கிறோம்.பார்சல் வாங்க வருபவர்கள் பார்சல் வாங்க வருபவர்கள் 20 நிமிடம் காலதாமதம் ஆகும் என்று சொன்னால் ஹோட்டல்களில் பொருளை ஆர்டர் செய்துவிட்டு அது குறித்த தகவலை பொருள் ரெடியான உடன் கஸ்டமர் க்கு தெரிவிக்கப்படும் பின்னர் வந்து பொருளை பெற்றுச் செல்லலாம். இதன் மூலம் உங்களுடைய காலம் மற்றும் அலைச்சல் மிச்சமாகும். பெரிய ஓட்டல்களுக்கு தினசரி 118 ரூபாய் மட்டுமே செலவாகும் எத்தனை டெலிவரி வேண்டுமானாலும் நாங்கள் செய்து கொடுப்போம் சிறிய நிறுவனங்களுக்கு இன்னும் கட்டணம் குறைவாகும் பொது மக்களுக்கு ஓட்டலில் என்ன விலை அதே விலையில் பொருள் கிடைக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல்லில் தொடங்கப்பட்ட இந்த செயலி பத்தாயிரம் பேர் இணைந்துள்ளனர் தற்போது துவக்க விழா நடக்கும் இந்த செயலில் திருச்செங்கோட்டில் மட்டும் இதுவரை ஆயிரம் பேர் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் இதன் மூலம் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் எங்களுக்கும் கணிசமான தொகை வருமானம் வரும் என்பது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு கடையின் விலையிலேயே உணவு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் எனக் கூறினார்.
Next Story

