திருச்செங்கோட்டில் திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

திருச்செங்கோட்டில் திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரப் பொதுக்கூட்டம் கைலாசம்பாளையத்தில் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக திருச்செங்கோடு கிழக்கு நகரதிமுக, நகர திமுக இளைஞரணி ஆகியவற்றின் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்பரமத்தி சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கே எஸ் மூர்த்தி,திமுக தலைமைக் கழக பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் 102வது பிறந்தநாள் காணும்திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிறப்புகள் குறித்தும் பேசினார்கள். திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன்,நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, 3வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் செல்வி ராஜவேல், மாவட்ட திமுகஇளைஞரணி துணைச் செயலாளர்கள் நவலடி ராஜா, மல்லை ஜெகதீஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜிஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பேசிய தலைமைக் கழக பேச்சாளர் ஆடுதுறை உத்தராவதி கூறியதாவது 14 வது வயதில் தமிழுக்காக போராடி களம் கண்டுதன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காக உழைத்தவர் கருணாநிதி. கல்லூரி படிப்பே படிக்க முடியாது என்று இருந்த காலச் சூழ்நிலையில் அனைவரும் பட்டம் பெறபட்டதாரிகளாக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி பெண்கள் குறைந்தபட்சம் பள்ளி படிப்பு படிக்க வேண்டும் அதனை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக திருமண நிதி உதவித்தொகை திட்டம் கொண்டு வந்தவர் கருணாநிதி. இன்றைய முதல்வர்ஸ்டாலின் தந்தையை விட பல மடங்கு செயலாற்றல் திறன் கொண்டவராக திகழ்கிறார். பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் பேருந்து பயணத்திட்டம், படிக்கும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம்,என மகளிர் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இன்னும் மகளிர் உரிமை திட்டம் பெறாதவர்கள்மறுபடியும் விண்ணப்பித்தால் தகுதி உள்ளவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க அரசு நிர்வாகம் உங்களைத் தேடி வரும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். மகனைக் காப்போம் சம்மந்தியை மீட்போம் என கூற வேண்டிய பழனிச்சாமி வேறு எதையோ கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்வதாக நாளுக்கு ஒன்றை உளறிக் கொண்டிருக்கிறார்.என கூறினார் கூட்டத்தில் முன்னாள் மாவட்ட அவை தலைவர் தாண்டவன் நகர திமுகவைத் தலைவர் மாதேஸ்வரன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல் நகர்மன்ற உறுப்பினர்கள் ராதா சேகர் அண்ணாமலை மாதேஸ்வரன் நகரை இளைஞரணி செயலாளர் செங்கோட்டுவேல் ஆகியோர் உள்ளிட்ட திமுக செயல் வீரர்கள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story