மாவட்ட ஆட்சியருக்கு மலர் கொத்து கொடுத்த எஸ் பி.ஜோஸ் தங்கய்யா.
மாவட்ட ஆட்சியருக்கு மலர் கொத்து கொடுத்த எஸ் பி.ஜோஸ் தங்கய்யா. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பெரோஸ்கான் அப்துல்லா பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் நிர்வாக நடவடிக்கைக்காக 33 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெரோஸ்கான் அப்துல்லா ஒருவராக இருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட ஜோஸ் தங்கய்யா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து மலர் கொத்து கொடுத்தார். மலர் கொத்து பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஜோஸ் தங்கையாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story




