அரசாணை வழங்கியும் அரியர் வழங்கவில்லை- ஆட்சியரிடம் புகார் மனு.
அரசாணை வழங்கியும் அரியர் வழங்கவில்லை- ஆட்சியரிடம் புகார் மனு. கரூர் மாவட்டம் ஆண்டான் கோவில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓ எச் டி ஆபரேட்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2018 முதல் 2025 வரை எஸ் ஆர் புக் ஆவணங்களில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு அரியர் வழங்க அரசாணை எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பிடிஓ ஏபிடிஓ அலுவலர்களிடம் பலமுறை அரியர் தொகை வழங்க கோரி கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குணசேகர் தெரிவிக்கும்போது, நீண்ட வருடங்களாக பணிபுரியும் பணியாளர்களுக்கு அரியர் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Next Story




