கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை.இரண்டு பெண்கள் கைது.

கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை.இரண்டு பெண்கள் கைது.
கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை.இரண்டு பெண்கள் கைது. கரூர் மாவட்டம் வாங்கல் மற்றும் வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் நேற்று மாலை நன்னியூர் புதூர் மற்றும் பஞ்சமாதேவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது என் புதூர் பகவதி அம்மன் கோவில் அருகே வசித்து வரும் அன்பழகன் மனைவி பிரியா வயது 42 என்பவரும, பஞ்சமாதேவி அருகே கரிக்காலி நகர் முதல் தெருவை சேர்ந்த சேகர் மனைவி ஆசைதங்காள் வயது 62 என்பவரும் அவரவர் வீட்டின் அருகாமையில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரும் விற்பனைக்காக வைத்திருந்த 15 பீர் பாட்டில்களும் 8 குவாட்டர் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல்துறையினர் இருவரையும் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story