மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காதுகேளாளர் பொதுநல முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் சுகுமார் தலைமையில் மனு அளிக்கப்பட்டது, அம்மனுவில், பல்வேறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சைகை மொழி பெயர்ப்பாளர் முறையாக நியமிக்கப்பட வேண்டும். காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் 70 வயது வரை நீட்டிப்பு வழங்க வேண்டும். தீயணைப்பு காவல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அவசர காலங்களில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் எளிதில் தொடர்பு கொள்ள சைகை மொழி பெயர்ப்பாளர் உடன் கூடிய வாட்ஸப் அழைப்பு சேவை செயலி உருவாக்க வேண்டும். காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை, இலவசமாக சோலார் மின்விளக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக வழங்கினர்.
Next Story

