கொடைக்கானல் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

X
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் கூடிய லேசான மழையும் சாரலும் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றில் பழனி - கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் கிடந்த மரத்தை அகற்றினா். மேலும், சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்கள், மரக் கிளைகளை அகற்ற வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Next Story

