ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
X
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, விருதுநகர் மாவட்டம், சத்திரரெட்டியாபட்டி இரயில்வே இருப்புபாதை அருகில் சாலை அகலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சத்திரரெட்டியாபட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து பொருட்கள், குழந்தைகளுக்கான உணவு தயாரிக்கும் மூலப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, சத்திரரெட்டியாபட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகளை ஆய்வு செய்து, ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்களின் மனுக்கள் முன்பதிவு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story