தேசிய வேளாண்வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோளம், நெற்பயிகள் மற்றும் பருத்தி விதைகள்சாகுபடிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் தகவல்

தேசிய வேளாண்வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோளம், நெற்பயிகள் மற்றும் பருத்தி விதைகள்சாகுபடிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்  ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் தகவல்
X
தேசிய வேளாண்வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோளம், நெற்பயிகள் மற்றும் பருத்தி விதைகள்சாகுபடிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் தகவல்.
தேசிய வேளாண்வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோள சாகுபடிக்காக சிறப்பு திட்டமாக தேசியவேளாண் வளர்ச்சி திட்டம் - மக்காச்சோள சாகுபடி சிறப்பு திட்டம் (Special Project on maize cultivation)-ஆக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ்மக்காச்சோள செயல் விளக்கத்திடல் விருதுநகர் மாவட்டத்திற்கு 5,500 எக்டேர் இலக்குபெறப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடியில் முக்கிய பயிராக மக்காச்சோளமேமுதலிடத்தில் உள்ளது. அதனை சாகுபடிசெய்யும் விவசாயிகளுக்கான முக்கிய திட்டமான இதில் விதைகள் அங்கக உரங்கள் மற்றும் உயிர்உரங்கள் வழங்கப்படவுள்ளது. செயல் விளக்கத்திடல்கள் அமைத்து அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைபிடித்து உயர் மகசூல் பெற்றிடவும் அதன் விளைவாக மக்காச்சோளப்பயிர் சாகுபடி பரப்பினைஅதிகரித்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெற்பயிரில் SRI/இயந்திர நடவுக்காக எக்டருக்கு ரூ.6000 மானியம், பருத்தி விதைகள் கிலோவிற்கு ரூ.140 மானியம், பருத்தியில் நுனிக்கிள்ளுதலுக்கு எக்டருக்கு ரூ.1250 மானியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
Next Story