தாயை கொலை செய்த வழக்கில் மகன் மற்றும் தந்தையை கைது செய்து
தாயை கொலை செய்த வழக்கில் மகன் மற்றும் தந்தையை கைது செய்து பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஊரக காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பாடி பகுதியில் 19.07.2025 –ம் தேதி பரமஜோதி (73) தபெ செல்லமுத்து என்பவர் தனது மனைவி கலைச்செல்வி(65) என்பவர் வயது முதிர்வு காரணமாகவும் அடிக்கடி முதுகு தண்டுவடம் சரியில்லாத்தால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தாகவும் அதன் காரணமாக வயலில் உள்ள சப்போட்டா மரத்தில் தூக்கு மாட்டி கொண்டு இறந்தாகவும் மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெரம்பலூர் ஊரக காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் விசாரணை தொடங்கிய பெரம்பலூர் ஊரக காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் பல்வேறு கோணத்தில் விசாரணை செய்ததில் *சிவசங்கர் (28)த/பெ பரமஜோதி என்பவர் சென்னையில் வேலை செய்து வருவதாகவும் தற்பொழுது அவர் விடுப்பில் வீட்டிற்கு வந்தாகவும். தனது தாய் கலைச்செல்வி(65) என்பவரிடம் தொழில் செய்ய அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்தாகவும், 19.07.2025ம் தேதி அன்று தனது தாய் வயலுக்கு செல்லும் போது பின்தொடர்ந்து பணம் கேட்ட போது தர மறுத்தால் தனது தாயை கொலை செய்தாக ஒப்புக்கொண்டார். மேலும் கொலையை மறைத்து தனது மகனை காப்பற்ற தந்தை பரமஜோதி என்பவர் கலைச்செல்வியை தூக்குமாட்டி இறந்தாக பொய் புகார் கொடுத்ததும், கொலைக்கு உடந்தையாக இருந்ததால் இருவரையும் கைது செய்த பெரம்பலூர் ஊரக காவல்நிலைய காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story



