மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமைக் கொள்கிறோம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டி.

மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமைக் கொள்கிறோம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டி.
X
மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமைக் கொள்கிறோம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டி அளித்தார்.
அரியலூர்,ஜூலை 21 - காட்டைத் திருத்தி, நகர், கிராமங்களை உருவாக்கிய மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றார் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் புதன்கிழமை (ஜூலை 23) மாமன்னர் ராஜேந்திரசோழனின் ஆடி திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடிதிருவாதிரை நாளான புதன்கிழமை(ஜூலை 23) காலை மங்கள வாத்திய நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. விழாவில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிதம்பரம் மக்களவை உறுப்பினர் திருமாவளவன் மற்றும் நான் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளோம். மேலும், கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளும், முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் } நிர்வாகத் திறனே! போர் வெற்றிகளை! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்று நாடகமும், நையாண்டி மேளம், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. காட்டைத் திருத்தி நகர் மற்றும் கிராமப்புறங்களையும் அமைத்து, மக்கள் பயன்பெறும் வகையில் சோழங்கங்கம் எனும் பொன்னேரி வெட்டி, பெருமைமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு தமிழக அரசு சார்பில் விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம். பிரதமர் வருகை குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு மட்டும் தான் தகவல் கிடைத்துள்ளது. மாநில அரசுக்கு இதுவரை தகவல் இல்லை. இரவு நேரங்களில் தொலைதூர அரசு பேருந்துகளில் பெயர் பலகையின் முகப்பு விளக்குகள் அனைத்து சில ஓட்டுநர்கள் செல்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டு பெயர் பலகைகளை எரியும் வண்ணம் செல்ல போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் கூறிவருவது அவர்களுக்குள் பங்கு பிரிப்பதில் என்ன பிரச்சினை வந்துள்ளது என தெரியவில்லை. அதனால் இந்த நாடகத்தை தொடக்கி இருக்கிறார்கள். நாடகம் உச்ச கட்டத்தை அடையும் பொழுது முடிவுகள் என்னவென தெரிய வரும் என்றார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.சிவராமன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் திருவருள், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, வட்டாட்சியர் சம்பத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். :
Next Story