குமாரபாளையம் அருகே மலைக் காவலருக்கு கிடா விருந்து

குமாரபாளையம் அருகே உள்ள குட்டி கிணத்தூர் பகுதி மக்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையை காக்கும் மலை காவலருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தனர் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
குமாரபாளையம் அருகே உள்ள குட்டி கிணத்தூர் பகுதியில் பகுதி மற்றும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரும்பாலும் வேட்டுவத் சமுதாயத்தை சார்ந்தவர்கள் இவர்கள் தங்களின் இஷ்ட தெய்வமாக திருச்செங்கோடு மலை அர்த்தநாரீஸ்வரர் விரும்பி வணங்கி வருகின்றனர் தங்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடந்தால் அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்பு தங்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்வார்கள் தங்களின் இஷ்ட தெய்வீகமான அர்த்தனாரிஸ்வரர் மலையை காத்து வரும் மலைக்காவலர் சுவாமிக்கு ட்டி கிணத்தூர் பகுதி மக்கள் நன்றி கடன் செலுத்தும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடா வெட்டி விருந்து வைப்பது வழக்கம் அதனை ஒட்டி இன்று குட்டி கிணத்தூர் பகுதி மக்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தை காத்து வரும் மலைக் காவலருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தனர் இந்நிகழ்ச்சியில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் தங்கமணி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story