அரியலூர் பேருந்து நிலை அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை

X
அரியலூர், ஜூலை 21 - அரியலூர் பேருந்து நிலையம் அருகே வண்ணாங்குட்டை பகுதியிலுள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலர் டி.தண்டபாணி தலைமையில், ஒன்றியச் செயலர்கள் து.பாண்டியன், சிவக்குமார், நாகமங்கலம் பிச்சைப்பிள்ளை உள்ளிட்டோர் அளித்த மனுவில், அரியலூர் பேருந்து நிலையம் பின்புறம், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றி, வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரியலூர்கல்லங்குறிச்சி நெடுஞ்சாலையை இரு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்துறை அருகேயுள்ள ஆலத்தியூர்கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 5 அருந்ததியர் குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகமங்கலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டராக வேலை செய்து ஓய்வுப் பெற்ற பிச்சைப்பிள்ளைக்கு தர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்ககைள் வலியுறுத்தப்பட்டிருந்தது. :
Next Story

