செம்பியன்மாதேவி சிலைக்கு மாலை அணிவிப்பு

செம்பியன்மாதேவி சிலைக்கு மாலை அணிவிப்பு
X
செம்பியன்மாதேவி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அரியலூர், ஜூலை 21- அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த செம்பியக்குடி கிராமத்திலுள்ள சோழப்பேரரசி செம்பியன் மாதேவிக்கு சிலைக்கு வரலாற்று மீட்புக் குழுவினர் மாலை அணிவித்து, திங்கள்கிழமை மரியாதை செலுத்தினர். மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை விழாவை முன்னிட்டு, செம்பியக்குடி கிராமத்திலுள்ள அவரது பாட்டி செம்பியன் மாதேவி சிலைக்கு வரலாற்று மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம் தலைமையில் காவிரித்தாய் வழி வேளாண் உழவர் நடுவம் நிறுவனர் தங்கராசு, பேராசிரியர் சூசை வளனறிவு, செம்பியன் மாதேவி அறக்கட்டளை நிர்வாகிகள் சிவசண்முகவேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். :
Next Story