வேப்பனப்பள்ளி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவர் 18 வயதுடைய கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

