போச்சம்பள்ளி அருகே மின்கம்பி துண்டாகி விழுந்ததில் மின்சாதனங்கள் எரிந்து சேதம்

போச்சம்பள்ளி அருகே மின்கம்பி துண்டாகி விழுந்ததில்  மின்சாதனங்கள் எரிந்து சேதம்
X
போச்சம்பள்ளி அருகே மின்கம்பி துண்டாகி விழுந்ததில் மின்சாதனங்கள் எரிந்து சேதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சிப்காட் அரசமரத்து பேருந்து நிறுத்தம் அருகே உயா் அழுத்த மின்கம்பி, துண்டாகி சாதாரண மின் அழுத்த கம்பியின் மீது விழுந்தது. இதனால் சிப்காட் புதூா் கொல்லப்பட்டாய் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் உள்ள தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டா், மின் மோட்டாா், மின் மீட்டா் போன்றவை தீயில் கருகி சேதமாயின. இதனால் மின்சாரம் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று மதியம் மின்சாரம் சீரானது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனா். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story