புளியங்குடியில் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது

புளியங்குடியில் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது
X
ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோவிலின் 73 வது ஆடி கார்த்திகை விழா காந்தி பஜாரில் உள்ள அலங்கார பந்தலில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் எழுபத்தி மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் ஆடிகார்த்திகை விழாவில் வெள்ளிக்கிழமை மாலை ஹம்ஸினி வைத்தீஸ்வரன் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.சனிக்கிழமை மாலை ஆன்மிக பேச்சாளர் சென்னை மணிகண்டன் வேல்உண்டு வினைஇல்லை என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு வழங்கினார்.ஞாயிறு காலை பால்குடம்,சுவாமி அழைப்பு பின் சோடசோப தீபாராதனையும் நடைபெற்றது,பகலில் உற்சவ மூர்த்தியை மண்டகப்படிக்கு அழைத்து வந்து கும்பஜெபம்,ஹோமம்கள் அபிஷேகம் நடைபெற்றது. நேற்று மாலை எழு மணிக்கு பெரிய தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பின் சுவாமி புஷ்ப அலங்காரத்துடன் சப்பரத்தில் வீதி உலா வலம் வந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story