சேலம் பேங்க் ஆப் இந்தியா சார்பில்

X
பேங்க் ஆப் இந்தியா சார்பில் விவசாயிகளுக்கான கிஷான் மேளா மற்றும் வேளாண் சேவை பெருவிரிவாக்க திட்ட முகாம், சேலத்தில் நடைபெற்றது. இதற்கு வங்கியின் தலைமை அலுவலக பொது மேலாளர் ஷம்பா பிஸ்வாஸ் தலைமை தாங்கினார். கோவை மண்டல மேலாளர் ரஞ்சித் குமார், உதவி மண்டல மேலாளர் சிவ சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 35 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5½ கோடி கடனுதவிக்கான முன் அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு ரூ.24 கோடியே 10 லட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்கள், சுயஉதவிக்குழுவினர், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வங்கியின் வேளாண் தொடர்பான நிதி திட்டங்கள், சுயஉதவிக்குழுவினருக்கான கடன், பண்ணை தொழில்நுட்பம், கிஷான் தட்கல், கிஷான் ஹார், கால்நடை பராமரிப்பு தொடர்பான திட்டங்கள், அவசர தேவைக்கான நிதியுதவி, வாகன கடன் மற்றும் நேரடி பங்குகள் குறித்து அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
Next Story

