பாப்பம்பாடி ஊராட்சி செயலாளர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு:

X
சேலம் மாவட்டம் பாப்பம்பாடி ஊராட்சி எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் சிவகுமார். இவர், வேறு ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் தாரமங்கலம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உள்ளேயே 14 பேருக்கு பணியிட மாற்றம் செய்துள்ளோம். பாப்பம்பாடி ஊராட்சி எழுத்தரை மீண்டும் அங்கேயே பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story

