மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெண் தீக்குளிக்க முயற்சி

மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெண் தீக்குளிக்க முயற்சி
X
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணின் உடலில் தண்ணீரை ஊற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து அழுதபடி சுமதி கூறும் போது தனது கணவர் தியாகராஜன் தறித்தொழில் நிறுவனம் வைப்பதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2½ லட்சம் கடன் பெற்றார். ரூ.1 லட்சம் செலுத்தி விட்டோம். தனது கணவருக்கு திடீரென்று இதய நோய் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து நிறுவனத்தை நடத்த முடியவில்லை. தற்போது தனியார் நிதி நிறுவனத்தினர் கடனை திரும்ப செலுத்துமாறு நெருக்கடி கொடுக்கின்றனர். மன உளைச்சலால் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று கூறினார். இதையடுத்து சுமதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story