அரியலூர் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

X
அரியலூர், ஜூலை 22 - அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஷ்வேஷ் பா.சாஸ்திரி பொறுப்பேற்றுக் கொண்டார்.ஏற்கனவே காவல் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் தீபக்சிவாச் பணியிடம் மாற்றப்பட்டு, சென்னை வடக்கு பெருநகர போக்குவரத்து காவல் துணைக் ஆணையராக பணியாற்றி வந்த விஷ்வேஷ் பா.சாஸ்திரி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, விஷ்வேஷ் பா.சாஸ்திரி அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அனைத்து நிலை காவலர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். :
Next Story

