கரூர்-குற்றச் செயல் குறித்து புகார் அளித்தால் உடனே நடவடிக்கை- எஸ் பி அறிவிப்பு.
கரூர்-குற்றச் செயல் குறித்து புகார் அளித்தால் உடனே நடவடிக்கை- எஸ் பி அறிவிப்பு. நேற்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜோஸ் தங்கய்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படும். குற்றங்களை தடுக்க அதிக அளவில் CCTV கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக அதிக அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் , தற்போது பெருகிவரும் இணையவழி குற்றங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இணைய வழி குற்றங்கள் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, புகார்கள் மீது முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் மற்றும் சூதாட்டம், லாட்டரி, மணல் திருட்டு தொடர்பான புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி காவல் நிலையங்களை அணுகி கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story




