வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக இளைஞர் தற்கொலை

X
புதுக்கோட்டை, விராலிமலை அடுத்த மேலதொட்டியபட்டியைச் சேர்ந்தவர் முரளி (31). இவர் 4 ஆண்டுகளாக கொடும்பாளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகாதவர். இந்நிலையில் நேற்று தனது வாழ்க்கையின் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, பெரியகுளம் மயானம் அருகில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது தாய் அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

