அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

X
அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் இன்றும் நாளையும் இரு தினங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பேரூர் செயலாளர் எழிலரசன், பேரூராட்சி தலைவர் நந்தினி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், கோகுல கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அச்சரப்பாக்கம் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் இயற்கை உரம், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த முகாமில் அரசுத்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து வந்தனர்.
Next Story

