நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை !

நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை !
X
நொய்யல் நதியின் சீரழிவைத் தடுக்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரியுள்ளது.
நொய்யல் நதியின் சீரழிவைத் தடுக்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரியுள்ளது. தொழிற்சாலை கழிவுகள், குப்பைகள் மற்றும் கழிவுநீரால் ஆறு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் மோசமடைந்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்தது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதுவரை எந்த உத்தியோகபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சங்கம் குற்றம்சாட்டியது. சூலூரில் பேசிய சங்க ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன், “திருப்பூர் வருகை தரும் முதல்வரை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும். மறுக்கப்பட்டால் தீவிரமான போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார். நொய்யல் நதியின் புனரமைப்பு குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள் முக்கியமான கோரிக்கையாகும்.
Next Story